பெற்றோர்களே உஷார்.! வயிற்று வலியால் துடிதுடித்த 6 வயது சிறுவன்! பரிசோதனை செய்த மருத்துவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

பெற்றோர்களே உஷார்.! வயிற்று வலியால் துடிதுடித்த 6 வயது சிறுவன்! பரிசோதனை செய்த மருத்துவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!



magnet chain in young child stomach

சிறு குழந்தைகள் அனைவரும் எதனை எடுத்தாலும் உடனே அதனை வாயில் வைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இதனால் வைரஸ் பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமின்றி தவறுதலாக அந்த பொருட்கள் வயிற்றுக்குள் செல்வதால் பெரும் சிக்கல்கள் உருவாகிறது.

மேலும் பெற்றோர்கள் எவ்வளவு தான் கவனமாக பார்த்துக் கொண்டாலும் சிறுவர்கள் ஏதாவது ஒரு பிரச்சினையை ஏற்படுத்திவிடுகின்றனர். அவ்வாறு சீனாவில் பள்ளியில்  படித்து வரும் 6 வயது சிறுவன் ஒருவன் சமீப காலமாக கடுமையான வயிற்று வலியால் துடித்து வந்துள்ளான். இந்நிலையில் சிறுவனின்  பெற்றோர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

magnet

அங்கு மருத்துவர்கள் சிறுவனின் வயிற்றை எக்ஸ்-ரே எடுத்து பார்த்துள்ளனர். அப்பொழுது சிறுவனின் வயிற்றின் உள்ளே இருப்பதை கண்ட மருத்துவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் அதாவது சிறுவனின் வயிற்றில் காந்த குண்டுகள் கொத்தாக இருந்துள்ளது.

magnet

அதாவது விளையாட்டுப் பொருட்களில் உள்ள காந்தகுண்டுகளை அந்த சிறுவன் விழுங்கியதாக கூறப்படுகிறது பின்னர் சுமார் 3  மணி நேரம் அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுவனின் வயிற்றில் இருந்து 64 க்கும் மேற்பட்ட குண்டுகள் வெளியே எடுக்கப்பட்டது . மேலும் இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து மாலைகள் போல வயிற்றினுள்ளே இருந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.