தூதரகத்தை மூடி சீனாவில் இருந்து வெளியேறிய லிதுவேனியா - காரணம் தெரியுமா?.!

தூதரகத்தை மூடி சீனாவில் இருந்து வெளியேறிய லிதுவேனியா - காரணம் தெரியுமா?.!



Lithuania Embassy Closed at China by Lithuania Govt due to Taiwan Issue

சீன அரசு தைவானை தனது நாட்டின் பகுதி என அறிவித்துள்ள நிலையில், இதற்கு தைவானில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவ்வப்போது தைவான் மக்கள் சீன அரசின் காவலர்களால் தாக்கப்படும் சம்பவமும், போராட்டமும் நடைபெற்று வரும் நிலையில், தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் அதன் கூட்டு நாடுகள் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது. சீனா தனது நிலையில் இருந்து மாற வேண்டும் எனவும் அமெரிக்கா தெரிவித்து வருகிறது. 

china

மேலும், தைவானுடன் நெருக்கமாக இருக்கும் பிற நாடுகளுக்கு சீனா பலவிதமான நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், தைவானுக்கு தனி நாடு அங்கீகாரம் அளிக்கும் பொருட்டு, தைவானுக்கான பிரதிநிதித்துவ அலுவலகத்தை திறக்க லிதுவேனியா அனுமதி வழங்கியது. இந்த விஷயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, தனது நாட்டில் உள்ள லிதுவேனியா தூதரகத்தின் அந்தஸ்தை குறைத்தது. 

china

இதற்கு பெரும் கண்டனம் தெரிவித்த லிதுவேனியா, சீனாவில் உள்ள தங்களது நாட்டின் தூதரை நாட்டிற்கு திரும்ப அழைத்துக்கொண்டது. இதனால் இருநாட்டு உறவுகள் பெருமளவு பின்னடைவை சந்தித்துள்ளது. படிப்படியாக தங்களது நாட்டு தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றுக்கொண்ட லிதுவேனியா, அனைத்து அதிகாரிகளையும் இன்றோடு வெளியேற்றி சீனாவில் உள்ள தனது தூதரகத்தை மூடியது.