ஷாக்.. 2026ல் அசுர வேகத்தில் உயரும் தங்கம்.. நகை வாங்க இதுதான் சரியான நேரம்.. மிஸ் பண்ணிடாதீங்க.! 



Gold Price to Rise 15–30% in 2025: Urgent Alert for Buyers 

2026ல் தங்கம் 15-30% வரை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், தற்போது தங்கம் வாங்க நல்ல நேரமென பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

தங்கம், வெள்ளி போன்ற நகை மீது பலருக்கும் ஆர்வம் என்பது எப்போதும் குறையாமல் இருக்கும். வெள்ளியை விட தங்க நகைகள் மீதான வரவேற்பு அதிகம் இடம்பெறும். புதிய டிசைன்கள் போன்றவை பெண்களை மட்டுமல்லாது, ஆண்களையும் தங்கத்தை நோக்கிய பார்வையை திரும்பிப் பார்க்க வைக்கும். திருமணம் என்றாலே ஆண்கள், பெண்களுக்கு நகை எடுப்பது வாடிக்கையாக இருக்கிறது. 

உச்சத்தில் தங்கம்:

சேமிப்பு, எதிர்கால நலன், அவசர தேவை என தங்கம் பல விஷயங்களுக்கு பயன்படுகிறது. திருமண வயதில் இருக்கும் பெண்களுக்கு 20 சவரன் நகை என பெற்றோர்கள் சேமித்து வருகின்றனர். தற்போது தங்கம் 22 கேரட், 24 கேரட் என்று வகை பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் 22 மற்றும் 24 கேரட் தங்க நகைகள் மக்களின் தேர்வு காரணமாக விலையை உச்சத்தில் நகர்த்தி கொண்டு செல்வதால் மக்கள் விழிபிதுங்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: நகைப்பிரியர்களுக்கு பேரிடி.. புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி.. ரூ.90,000ஐ நெருங்குகிறது.!

gold rate

விண்ணை முட்டும் வெள்ளி விலை:

2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் தேதி தங்கம் ரூ.57,200 க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராம் தங்கம் ரூ.7,150 இருந்தது. ஆனால் தற்போது அதன் விலை சிறிது சிறிதாக உயர்ந்து உச்சத்தை நோக்கி பயணித்து இருக்கிறது. வெள்ளியின் விலையும் அதேபோல கிலோ ரூ.1,07,000 இருந்து 2 லட்சம் வரை சென்று இருக்கிறது. 

2026ல் வரலாறு காணாத உச்சத்தை தொடப்போகும் தங்கம்:

பொருளாதார மந்த நிலை, தங்கத்தின் தேவை அதிகரிப்பு, டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உட்பட பல காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்த விலை 2026 ஆம் ஆண்டில் 15 முதல் 30 % வரை உயரலாம் என தெரிய வருகிறது. இதனால் நகை வாங்க நினைக்கும் பலரும் தற்போதைய நாட்களை தவறவிடாமல் நகை வாங்குவதே நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: ரூ.4,000 குறைந்தது வெள்ளி விலை.. தங்கம் விலையும் சரிவு.. இன்றைய விலை நிலவரம்.!