நகைப்பிரியர்களுக்கு பேரிடி.. புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி.. ரூ.90,000ஐ நெருங்குகிறது.!



chennai-today-gold-and-silver-price-october-7-2025

இன்றைய தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 அதிரடியாக உயர்ந்துள்ளது.

உலகளவில் நடைபெறும் போர்கள், பொருளாதார பிரச்சனை உட்பட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை என்பது கடுமையான உச்சத்தை சந்தித்து இருக்கிறது. தங்கம் மற்றும் வெள்ளியின் மீதான முதலீடுகளும் ஒரு காரணமாக அமைந்துள்ளது. சர்வதேச சந்தைகளின் அடிப்படையில் ஒவ்வொருநாளும் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

போட்டி போட்டுக்கொண்டு உயரும் வெள்ளி :

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த தங்கம், வெள்ளி விலையை ஒப்பிடும்போது தற்போது பல மடங்கு அதிகரித்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக ரூ.55,000ல் இருந்த சவரன் தங்கம் விலை கடந்த மாதம் திடீரென உயர்ந்து ரூ.75,000ஐ கடந்தது. அதுபோல வெள்ளியின் விலையும் தங்கத்திற்கு ஈடாக உயர்ந்து வருகிறது.

Gold price

தங்கம், வெள்ளி விலை புதிய உச்சம் :

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, சவரன் ஆபரண தங்கம் ரூ.89,600 க்கு விற்கப்படுகிறது. கிராம் தங்கம் விலை ரூ.75 உயர்ந்து, ரூ.11,200 க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலையை பொறுத்தவரையில் எந்தவித மாற்றமுமின்றி கிலோ வெள்ளி ரூ.1,67,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ரூ.90,000ஐ நோக்கி தங்கம் :

முன்னதாகவே தங்கத்தின் விலை ரூ.1 இலட்சம் முதல் ரூ.2 இலட்சம் வரை விலை உயரலாம் என நகை வியாபாரிகள் கூறி வரும் நிலையில், அதனை உறுதி செய்யும் பொருட்டு தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.2,600 உயர்ந்துள்ளது. விரைவில் ரூ.90,000ஐ கடக்க இருக்கிறது. இதனால் 22 காரட் தங்கத்தின் விலை இந்த வருடம் முடிவதற்குள் ரூ.1,00,000 ஐ கடந்து விற்பனையாகும் என கூறப்படுகிறது.