விளையாட்டாக செய்த காரியம்.! இரண்டு வருடம் கழித்து சிறுவனின் மூக்கில் இருந்து வெளிய வந்த அந்த பொருள்.! பரபரப்பு சம்பவம்.!

விளையாட்டாக செய்த காரியம்.! இரண்டு வருடம் கழித்து சிறுவனின் மூக்கில் இருந்து வெளிய வந்த அந்த பொருள்.! பரபரப்பு சம்பவம்.!



Lego piece came out from 7 years old nose after 2 years

7 வயது சிறுவன் ஒருவரின் மூக்கில் இருந்து 2 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன லெகோ துண்டு வெளியே வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு நியூசிலாந்தின் டுனெடினைச் சேர்ந்தவர் 7 வயதாகும் சிறுவன் சமீர் அன்வர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களை இணைக்க பயன்படும் லெகோ துண்டு ஒன்றினை மூக்கிற்குள் சொருகியபோது அந்த லெகோ துண்டு காணாமல் போனது.

இதுகுறித்து சிறுவன் பெற்றோரிடம் கூற, பதறிப்போன அவர்கள் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்துள்ளனர். ஆனால் மருத்துவர்களாலும் அந்த லொகோ துண்டினை சிறுவனின் மூக்கில் இருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.

Mysterious

லெகோ துண்டு எப்படியும் வயிற்றுக்குள் சென்று, செரிமான பாதை வழியாக வெளியே வந்துவிடும், பயப்பட தேவை இல்லை  கூறி மருத்துவர்கள் சிறுவனின் பெற்றோரை அனுப்பிவிட்டனர். ஆனாலும் லெகோ துண்டு 2 ஆண்டுகளாகியும் வெளியே வரவில்லை. அதேநேரம் சிறுவனுக்கு வலியோ அல்லது வேறு எந்த பிரச்சனைகளோ ஏற்படவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் சிறுவனின் தாய் சுவையான கப் கேக்குகளை செய்து வைத்திருக்கின்றனர். கேக்குகளை பார்த்த சிறுவன் அதன் அருகே சென்று நல்லா மூச்சை இழுத்து வாசனை பிடித்துள்ளான். அப்போது திடீரெனெ சிறுவனுக்கு மூக்கில் வலி ஏற்பட தொடங்கியுள்ளது.

ஒருவேளை கேக் துண்டுகள்தான் மூக்கிற்குள் சென்றுவிட்டதோ என பதறிய சிறுவனின் தாய் சமீரின் தாய் மூக்கை ஊதிவிட்டிருக்கிறார். அப்போது 2 ஆண்டுகளுக்கு முன் சிறுவனின் மூக்கிற்குள் சென்ற லெகோ துண்டு பூஞ்சை பிடித்து வெளியே வந்துள்ளது. இதனை சற்றும் எதிர்பாராத சிறுவனின் தாய் லெகோ துண்டு சற்று பெரியதாக இருந்தாலும், இதை நம்பமுடியவில்லை என்று கூறியுள்ளார்.