போன் காலில் மனைவியிடம் கடைசியாக பேசிய வார்த்தை..... அந்தே அழைப்பே அவரது வாழ்க்கையை முடித்தது! குவைத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் பாலியான தமிழகத் தொழிலாளி.. கதறும் குடும்பத்தினர்..!!!
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம் மனித உயிர்களை பறிக்கும் விதமாக மோசமான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. அதற்கு சமீபத்திய உதாரணமாக குவைத்தில் நடந்த ட்ரோன் தாக்குதலில் தமிழர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குவைத்தில் ட்ரோன் தாக்குதல்
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் இடையிலான மோதல் சூழலில், குவைத்தில் உள்ள நீர் சுத்திகரிப்பு ஆலை மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் ராமநாதபுரம் மாவட்டம் அனிகுருந்தான் கிராமத்தைச் சேர்ந்த சந்தான செல்வம் (36) உயிரிழந்தார். கடந்த 10 ஆண்டுகளாக அங்கு எலக்ட்ரீசியனாக பணியாற்றி வந்த அவர், சம்பவத்தன்று பணியை முடித்து அறைக்குத் திரும்பியிருந்தார்.
இதையும் படிங்க: இளையர்களுக்கு மது அருந்தும் போட்டி! 19 பீர் பாட்டில்.... இறுதியில் இளையர்களுக்கு நடந்த பயங்கரம்! சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
அவசர அழைப்பும் துயர முடிவும்
அவரை அவசர பணிக்காக மீண்டும் ஆலைக்கு அழைத்தபோது, ட்ரோன் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. தாக்குதலின் போது கட்டிடம் இடிந்து விழுந்ததில் அவர் சிக்கி உயிரிழந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ட்ரோன் தாக்குதல் சம்பவம் அங்குள்ள இந்திய தொழிலாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்தின் துயரம்
இந்த சம்பவத்தை இந்தியத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. உயிரிழந்த சந்தான செல்வத்திற்கு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். "கம்பெனியிலிருந்து அழைப்பு வருகிறது" என்று கடைசியாகப் பேசிய கணவர் பிணமாக திரும்புவதை எண்ணி அவரது மனைவி கௌசல்யா துயரத்தில் உள்ளார்.
அரசு நடவடிக்கைகள்
உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். தமிழக அரசின் சார்பில் இழப்பீடு மற்றும் காப்பீட்டுத் தொகை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உடல் நாளை திருச்சி விமான நிலையம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இத்தகைய தமிழர் உயிரிழப்பு சம்பவங்கள் எதிர்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.