கொரோனாவால் பொருளாதாரம் சரியும் என்ற விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட ஜெர்மன் நிதி அமைச்சர்..!

கொரோனாவால் பொருளாதாரம் சரியும் என்ற விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட ஜெர்மன் நிதி அமைச்சர்..!



Jerman financial minister suside for yesterday

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி பாதிப்பை ஏற்ப்படுத்தி வருகிறது. அதேபோல் இந்நோய் ஜெர்மனியையும் தாக்கியுள்ளது. இந்நோயால் ஜெர்மனியில் இதுவரை 62 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 541 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சனையிலிருந்து ஜெர்மனி மக்கள் மீண்டாலும் ஜெர்மன் பொருளாதார பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்ள போகிறது என்று பொருளாதார நிபுணர்கள் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது. 

Jerman

ஜெர்மன் நாட்டின் ஹெஸ்ஸெ மாகாணத்தின் நிதியமைச்சர் தாமஸ் ஷஃபர் நிதிநிலை நெருக்கடிகள் குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வந்திருக்கிறார். மேலும் இப்பிரச்சினை குறித்து கடந்த 10 நாட்களாக யோசித்து வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளான நிதியமைச்சர் தாமஸ் நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இந்த சம்பவம் ஜெர்மனியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.