பிரபல கோடிஸ்வரருக்கு பெண் தோழி வேண்டுமாம்.. ! அதுவும் எதற்காக தெரியுமா..?

பிரபல கோடிஸ்வரருக்கு பெண் தோழி வேண்டுமாம்.. ! அதுவும் எதற்காக தெரியுமா..?


japanese-billionaire-maezawa-seeks-girlfriend-for-space

ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய கோடிஸ்வரர்களில் ஒருவர் யுசாகூ. ஜப்பானில் மிகப்பெரிய ஆன்லைன் பேஷன் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் யுசாகூ அவ்வப்போது மக்களை மகிழ்விக்க பலகோடிகளை அள்ளிவீசுவர். இதன் ஒரு பகுதியாக, தன்னை டிவிட்டரில் பின்தொடரும் பலரில் 100 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு 65 கோடியை பகிர்ந்து கொடுத்தார்.

தற்போது தன்னுடன் நிலவுக்கு வருவதற்காக பெண் தோழி ஒருவரை தேடி வருகிறார் யுசாகூ. ஆம், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் முதன்முறையாக SpaceX திட்டத்தை அறிவித்த போது நிலவுக்குச் செல்ல முதல் ஆளாக விண்ணப்பித்தவர் யுசாகூ. SpaceX நிறுவனம் நிலவுக்கு ஆட்களை அழைத்துச்செல்லும் பயணம் உறுதியானால் யுசாகூ தான் முதல் பயணியாக இருப்பார்.

SpaceX

இந்நிலையில், தான் நிலவுக்கு செல்லும்போது தன்னுடன் பெண் தோழி ஒருவர் உடன் வரவேண்டும் என ஆசை படும் யுசாகூ அதற்கான தேடுதல் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறார். இதில் தேர்வாகும் பெண்ணுக்கு யுசாகூ பல கோடிகளை சம்பளமாக அல்லது பரிசாக கொடுப்பார் என கூறப்படுகிறது.