உலகம்

வெளிநாட்டிற்கு தப்பிச்செல்கிறாரா ராஜபக்சே.? கொந்தளிப்புடன் விமான நிலையம் அருகே காத்திருக்கும் இலங்கை மக்கள்.!

Summary:

வெளிநாட்டிற்கு தப்பிச்செல்கிறாரா ராஜபக்சே.? கொந்தளிப்புடன் விமான நிலையம் அருகே காத்திருக்கும் இலங்கை மக்கள்.!

கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கையில், நேற்று கடும் வன்முறை வெடித்தது.  பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக மகிந்த ராஜபக்சே அறிவித்த சில மணி நேரங்களில், ராஜபக்சே ஆதரவரவாளர்களுக்கும் அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. .

ராஜபக்சேவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்ததை தொடர்ந்து அவர் விமானம் மூலம் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல முயற்சிகள் மேற்கொண்டுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ சிகிச்சை என்ற பெயரில் வெளிநாடு தப்பிச்செல்லலாம் எனவும் பரவலாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இதனால் ரத்மலான விமான நிலையம் அமைந்துள்ள சாலை அருகே ஏராளமான போராட்டக்காரர்கள் குவிந்துள்ளனர். ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் யாரும் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிடக்கூடாது என்பதால் விமான நிலையத்தை நோக்கி வரும் அனைத்து வாகனங்களையும் அவர்கள் சோதனையிட்டு வருகின்றனர்.


Advertisement