நடுவானில் வெடித்துச் சிதறிய விமானத்தின் பாகங்கள் கடலில் கண்டுபிடிப்பு; 188 பயணிகளின் நிலை என்ன!

நடுவானில் வெடித்துச் சிதறிய விமானத்தின் பாகங்கள் கடலில் கண்டுபிடிப்பு; 188 பயணிகளின் நிலை என்ன!



indonesia-flight-exploded

ஜகார்த்தாவில் இருந்து இன்று காலை புறப்பட்ட இந்தோனேசிய விமானம் கடலில் விழுந்தது என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அதில் பயணம் செய்த 188 பயணிகளின் நிலை என்ன என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.

இந்தோனேசியாவின் ஜகர்தாவில் இருந்து, சுமத்ரா தீவு அருகில் இருக்கும் பங்கல் பினாங் நகரத்திற்கு இன்று காலை புறப்பட்டுச் சென்ற விமானம் நடுவானில் மாயமானது.  188 விமானிகளுடன் பயணித்த இந்த விமானம், 13 நிமிடங்கள் கழித்து விமான நிலையத்துடனான தொடர்பில் இருந்து விலகியது. 



புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தேடும் பணியை தொடங்கினர். விமானத்தில் பயணிகள் விமான ஊழியர்கள் என மொத்தம் 188 பேர் பயணம் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், லயன் ஏர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது. சம்பவ இடத்திற்கு மீட்புக்குழுவினர் மற்றும் அதிகாரிகள் விரைந்தனர். விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்களை தேடும் பணியில் ஈடுபட்ட பொழுது விமானத்தின் பாகங்கள் கடலில் மிதப்பது கண்டுபிடிக்கபட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.