இந்தியா உலகம் Covid-19

இந்தியத் தொழிலாளர்கள் மீது அக்கறை கொண்ட சிங்கப்பூரிலும் கொரோனா பாதிப்பு! பாதிக்கப்பட்ட இந்தியர்கள் மட்டும் மொத்தம் எத்தனை பேர்?

Summary:

Indians affected by corona in singapore

சீனாவின் உகான் நகரில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகளில் பரவி வந்த இந்த வைரஸ் ஆனது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் கொரோனா பரவிய சில நாட்களில் இருந்தே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கொரோனாவிற்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்காத நிலையில் உலகின் பல நாடுகளும் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய தொழிலாளர்கள் மீது அதிக அக்கறை கொண்ட சிங்கப்பூரில், கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 18,205 ஆக உயர்ந்துள்ளது. சிங்கப்பூரில் இதுவரை 18 பேர் இறந்துள்ளனர். அந்த நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 4,800 பேர் இந்தியர்கள் மட்டும் ஆவர். இவர்களில் 90 சதவீதம் பேர் தொழிலாளர்கள்.

இந்தநிலையில் சிங்கப்பூரிலிருந்து சொந்த நாட்டுக்கு திரும்புவதற்கு, விருப்பம் தெரிவித்து 3,500 இந்தியர்கள், இந்திய தூதரகத்தில் விண்ணப்பித்துள்ளனர். சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் கூறுகையில், சிங்கப்பூர் அரசு வெளிநாட்டு தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொண்டிருப்பதாக அவர்களிடம் உறுதி அளித்தார். தொழிற்சாலைகள் மூடப்பட்டபோதிலும், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சம்பளம் தொடர்ந்து வழங்கப்படும் என்று உறுதி சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.


Advertisement