நடுரோட்டில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட ஆடுகள்; பதறவைக்கும் காட்சிகள்.!in Pakistan Goat Stolen in Road 

 

உள்நாட்டு பிரச்சனை, பணவீக்கம், பயங்கரவாத அச்சுறுத்தல் என பல சர்ச்சைகளில் சிக்கித்தவித்து வரும் பாகிஸ்தானில் குற்றச்செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அதனை அதிகாரிகள் கட்டுப்படுத்த முயற்சித்தாலும், அபரீதமாக அதிகரிக்கும் இவ்வாறான செயல்கள் தொடருகின்றன.

கடத்தி செல்லப்பட்ட ஆடுகள்

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் சாலை வழியாக மேய்ச்சலுக்கு அழைத்து செல்லப்பட்ட ஆடுகளை துப்பாக்கி முனையில் மர்ம நபர்கள் கடத்தி இருக்கின்றனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள செய்தியாளர், முன்பெல்லாம் பாகிஸ்தானில் சாலைகளில் சென்றால் செல்போன், பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது. தற்போது பக்ரீத்தை முன்னிட்டு ஆடுகளை கொள்ளையடிக்கிறார்கள் என கூறியுள்ளார். 

இதையும் படிங்க: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கலவரம்; விடுதலை கேட்டு மக்கள் போர்க்கொடி.. 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.!

2024ம் ஆண்டுக்கான பக்ரீத் பண்டிகை ஜூன் மாதம் இடையில் வரவுள்ளது. இஸ்லாமிய மதத்தினர் பெருவாரியாக சிறப்பிக்கும் இப்பண்டிகையை, உலகளவில் வாழ்ந்து வரும் இஸ்லாமியர்கள் கொண்டாடுவார்கள். அன்றைய நாளில் இறைச்சியில் சமைக்கப்படும் உணவுகளை இந்தியாவில் அன்னதானமாக வழங்கியும் சகோதரத்துவத்தை பாராட்டுவார்கள். 

இதையும் படிங்க: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து சோகம்; 20 பேர் பரிதாப பலி.. பாகிஸ்தானில் துயரம்.!