கல்கி 2898 ஏடி படம் குறித்த முக்கிய அப்டேட் கொடுத்த இயக்குனர்; ரசிகர்கள் ஹேப்பி.!
பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து சோகம்; 20 பேர் பரிதாப பலி.. பாகிஸ்தானில் துயரம்.!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள ராவல்பிண்டி - கில்கிட் சாலையில், பலடிஸ்கான் நோக்கி 30 க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று பயணம் செய்தது.
மலைப்பாங்கான பகுதியில் பயணித்த இந்த பேருந்து, தியமர் மாவட்டம் காரகோரம் பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் பள்ளத்தாக்கில் பாய்ந்து விபத்திற்குள்ளானது.
நொடிப்பொழுதில் நடந்த இவ்விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.