பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கலவரம்; விடுதலை கேட்டு மக்கள் போர்க்கொடி.. 144 தடை உத்தரவு பிறப்பிப்பு.!



in Pakistan Occupied Kashmir Violence 


உள்நாட்டு பிரச்சனை, பொருளாதார மந்தநிலை, தலைதூக்கும் பயங்கரவாதம், பணவீக்கம் என பல்வேறு பிரச்சனைகளில் பாகிஸ்தான் நாடு சிக்கித்தவித்து வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் ஜம்மு காஷ்மீரில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்த காஷ்மீர் பகுதிக்கு பாகிஸ்தானிய அரசு பாதுகாப்பு வழங்கி வருகிறது. 

அமைதி போராட்டம் வன்முறையானது

இன்று வரை சர்ச்சைக்குரிய சண்டைகளுக்கு வித்திடும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், தற்போது அங்குள்ள மக்கள் பாகிஸ்தானுக்கு எதிராக போராட்டத்தில் குதித்து இருக்கின்றனர். அதிகரித்த வரிகள் உட்பட பிற நடவடிக்கைகள் காரணமாக, ஆவாமி நடவடிக்கை குழு அமைதி போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. 

இதையும் படிங்க: நடுரோட்டில் 30 வயது இளம்பெண் பலாத்காரம்; நடுநடுங்க வைக்கும் பயங்கரம்.! அதிர்ச்சி காட்சிகள்.!

இந்த அமைதி போராட்டத்திற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த அந்நாட்டு இராணுவம் மற்றும் காவல்துறை எதிர்ப்பு தெரிவித்து, ஒருகட்டத்தில் அங்கு இருதரப்பு தள்ளுமுள்ளு, கைகலப்பு உருவாகி இருக்கிறது. பின் இது கலவரமாக உருமாறி, அங்குள்ள பல்வேறு நகரங்களில் பரவி இருக்கிறது. இந்த கலவரத்தை தொடர்ந்து அங்கு 144 தடை உத்தரவு அந்நாட்டு அரசால் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. 

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விடுதலை குரல்

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் மக்கள், தங்களுக்கு விடுதலை வேண்டும் என்ற குரல்களை முன்வைத்து தற்போது போராட்டத்தை முன்னெடுத்து இருக்கின்றனர். கண்ணில் படும் பாகிஸ்தானிய காவல்துறையினர் அடித்து விரட்டப்படுகின்றனர். கலவரம் உச்சமாக நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பதற்ற சூழல் தொடர்ந்து வருகிறது. 

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள சமாஹ்னி, செஹன்சா, மிர்பூர், ராவலகோட், குய்ராட்டா, தத்தபானி மற்றும் ஹட்டியான் பாலா நகரங்களில் முழு அளவிலான போராட்டம் வன்முறையாக மாறி இருக்கிறது.

இதையும் படிங்க: போரின் வெற்றியை கொண்டாடி, போதையில் பெண்களை பலாத்காரம் செய்த அமெரிக்கப்படைகள்; தாய்க்கு நடந்ததை நினைவுகூர்ந்த மகள்.!