விஜய் - திரிஷா சர்ச்சை.. அந்த காரை இப்போ யாரு வச்சிருக்கா? - விமலின் நக்கல் பதில்.!
42 வயது நபருடன் தூக்கில் தொங்கிய 15 வயது சிறுமி.. மர்மம் விலகாமல் விழிபிதுங்கும் காவல்துறை.! பெற்றோர் கண்ணீர்.!
15 வயது சிறுமி மற்றும் 42 வயது ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை விவகாரத்தில், அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளா மாநிலத்தில் உள்ள காசர்கோடு மாவட்டம், பைவளிகே பகுதியில் வசித்து வருபவர் பிரியேஷ். இவர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். பிரயேஷின் மனைவி பிரபாவதி. தம்பதிகளுக்கு ஸ்ரேயா என்ற 15 வயது மகள் இருக்கிறார். இவர் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். 13 வயதுடைய மகள், எட்டாம் குபு பயின்று வருகிறார்.
சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் பிரதீப் (வயது 42). இவர் ஆட்டோ ஓட்டுநர் ஆவார். பக்கத்து-பக்கத்து வீடுகளில் வசித்து வந்த ஷ்ரேயா - பிரதீப் நட்பாக பழகி வந்ததாலும், இருவரின் வயது வித்தியாசத்தாலும், அவர்களை பெற்றோர் சகோதரத்துவ முறையில் கவனித்து வந்துள்ளனர். மேலும், பிரதீப்பும் சிறுமியின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை செய்து வந்துள்ளார்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி பயங்கரம்.. இருவர் பரிதாப பலி.!

மாயமானவர்கள் சடலமாக மீட்பு
இந்நிலையில், கடந்த பிப்.11 அன்று சிறுமி வீட்டில் இருந்து மாயமானார். பிரதீப்பும் காணவில்லை. இருவரும் எங்கே சென்றார்கள் என தெரியாமல், சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் அதிகாரிகள் ஸ்ரேயாவை தேடி வைத்தனர். அவர்களின் செல்போன் நம்பரும் வழக்கில் முன்னேற்றத்தை முதலில் கொடுக்கவில்லை. இதனிடையே, சைபர் கிரைம் அதிகாரிகளின் உதவியுடன் தேடுதல் வேட்டை நடந்தது.
அப்போது, தம்பதிகள் இருவரும் வனப்பகுதியில் இருப்பதாக சிக்னல் கிடைக்க, அங்கு சென்றபோது மரத்தில் சிறுமி ஷ்ரேயா, பிரதீப் தற்கொலை செய்ததுபோல சடலமாக இருந்தது தெரியவந்தது. இருவரின் உடலையும் மீட்ட காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இருவரும் வீட்டில் இருந்து வெளியேறியது ஏன்? உண்மையில் தற்கொலை செய்தனரா? கொலையா? என விசாரணை நடந்து வருகிறது.
இதையும் படிங்க: தாயின் புற்றுநோய் பாதிப்பால் கவலை; 17 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை.!