உலகம்

மனைவியை பாத்ரூமில் வைத்து பூட்டிய கணவர்! போலீசாரையே அதிரவைத்த வேடிக்கையான காரணம்!

Summary:

Husband lock wife inside bathroom

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகில் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 3000க்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90000க்கும் அதிகமானோர்  பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் உலக நாடுகளே பெரும் அச்சுறுத்தலில் உள்ளது.

இந்நிலையில் லிதுவேனியாவின் வில்னியஸ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், இத்தாலியில் இருந்து வருகைதந்த சீனபெண்  ஒருவரை சந்தித்துவிட்டு வீடு  திரும்பியுள்ளார். இந்நிலையில் அப்பெண்ணின் கணவர் வீடு திரும்பிய அவரை உடனே குளியலறையில் வைத்து பூட்டியுள்ளார். இந்நிலையில் அப்பெண் நீண்ட நேரமாக கதவைத் தட்டியும், கணவர் கதவை திறக்கவில்லை. இந்நிலையில் அப்பெண் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்கள் அப்பெண்ணை குளியலறையிலிருந்து வெளியே மீட்டுள்ளனர். 

பின்னர்அந்த நபரிடம் இது குறித்து விசாரணை மேற்கொண்ட நிலையில், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தவே,  மருத்துவரின் ஆலோசனைப்படி தான் அவ்வாறு செய்ததாக கூறியுள்ளார். 

அதனைத் தொடர்ந்து அந்த பெண்ணிற்கு மருத்துவ சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு  கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.மேலும் அவரது மனைவி எந்த புகாரும் அளிக்காத நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement