தலைக்கேறிய போதை.. போதையில் குதிரைக்கு முத்தமிட முயன்ற இளைஞர்.. அதன் பின் காத்திருந்த அதிர்ச்சி..

குடிபோதையில் குதிரைக்கு முத்தமிட முயன்ற நபரின் மூக்கை அந்த குதிரை கடித்துவைத்த சம்பவம் ரஷ்யாவில் நடந்துள்ளது.
மனிதர்கள் ஒருசில விலங்குகளுடன் என்னதான் அன்பாக பழகிவந்தாலும், அவற்றிற்கு தொல்லைதரும்போது அவை நம்மை சீண்டுவது வழக்கம். அதற்கு உதாரணமான சம்பவங்களில் ஒன்றுதான் இது. ரஷ்யாவில் வசித்துவரும் வாசிலி(25) என்ற இளைஞர் ஒருவர் அங்கிருக்கும் பார் ஒன்றில் குடித்துவிட்டு போதையில் பாரில் இருந்து வெளியே வந்துள்ளார்.
தலைக்கேறிய போதையில் வெளியே வந்த அவர், அந்த பகுதியில் குதிரை சவாரியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இரண்டு பெண்களிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் நாளிரவு நேரத்தில் குதிரையில் வந்துகொண்டிருந்த பெண் ஒருவரை மறித்து, அந்த பெண்ணிடம் அவர் தகராறு செய்துள்ளார்.
அந்த பெண் சற்று சுதாரிக்கவே, அந்த பெண் ஓட்டிவந்த குதிரையிடம் வம்பு செய்ய முயன்றுள்ளார் வாசிலி. குதிரையின் முகத்தின் முன் நின்றுகொண்டு அதற்கு பலமுறை முத்தம் கொடுக்க முயற்சித்துள்ளார். அந்த பெண் எவ்வளவோ கூறியும் வாசிலி கேட்பதாக இல்லை.
ஒருகட்டத்தில் குதிரைக்கு அவர் முத்தம் கொடுக்க முயன்றபோது அந்த குதிரை அவரின் மூக்கை பலமாக கடித்துள்ளது. வலியால் அலறிய வாசிலியை மீட்டு அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக குதிரை அவரின் குருத்தெலும்பை கடிக்காததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் வாசிலியின் மூக்கு பிய்ந்து தொங்கிய நிலையில் இருந்ததை அடுத்து மருத்துவர்கள் கிழிந்த பகுதியை ஒன்றாக சேர்த்து தையல் போட்டுள்ளனர். அவரின் அந்த தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.
Image credits: https://t.me/bazabazon/5358