உழைப்பாளர்கள் வீதிகளில் ஓய்வு எடுக்கும் காட்சிகள்! தனி இடமில்லை... அட்டை பெட்டிகளில் தங்கும் இடம்! வைரலாகும் இன்ஸ்டா வீடியோ..!!!



hong-kong-migrant-domestic-workers-street-rest-issue

உலகின் பணக்கார நகரங்களில் ஒன்றாக கருதப்படும் ஹாங்காங்கில், வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்கள் வீதிகளில் ஓய்வு எடுக்கும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. வாராந்திர விடுமுறை நாளிலும் அவர்களுக்கு தனி இடமின்றி அட்டைப் பெட்டிகளில் தங்கும் நிலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சமூக வலைதளங்களில் வைரலான இந்த காட்சி பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

சட்டம் காரணமாக உருவான நிலை

ஹாங்காங் சட்டப்படி, வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்கள் தாங்கள் வேலை செய்யும் வீடுகளிலேயே தங்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. இதனால் அவர்களுக்கு தனிப்பட்ட ஓய்வு இடம் கிடைப்பது கடினமாகிறது. வேலை நேரத்திற்கு வெளியிலும் அவர்கள் தனிமையான இடத்தைப் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: திகில் காட்சி! உயிரை பணயம் வைத்து பயணம் செய்யும் சுரங்கப்பாதை! பீதி கிளப்பும் வீடியோ!

ஞாயிறு விடுமுறை... வீதியே ஓய்வு இடம்

தகவலின்படி, குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான இந்தோனேசிய மற்றும் பிலிப்பைன்ஸ் பெண்கள் வீடுகளில் இருந்து வெளியேறுகின்றனர். இதையடுத்து, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள மேம்பாலங்கள், நடைபாதைகள் போன்ற இடங்களில் அட்டைப் பெட்டிகளை வைத்து சிறிய தற்காலிக இடங்களை உருவாக்கி அங்கேயே ஓய்வெடுக்கின்றனர். இது நகரின் பணக்கார-ஏழை இடைவெளி குறித்து மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.

வைரலான வீடியோ எழுப்பிய கேள்வி

ஜப்பானிய பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த வீடியோ இந்த நிலையை உலகிற்கு காட்டியுள்ளது. அந்த பதிவில் காணப்படும் காட்சிகள், ஹாங்காங்கில் மறைந்து இருக்கும் மனித உரிமை பிரச்சனை குறித்து பலரும் கருத்து தெரிவிக்க வழிவகுத்துள்ளன. இதையடுத்து, வெளிநாட்டு பணியாளர்களின் வாழ்க்கை நலன் குறித்து புதிய விவாதங்கள் தொடங்கியுள்ளன.

 

இதையும் படிங்க: இத பார்க்கவே சகிக்கல....இத எப்புடி சாப்புடுறது! அரைகுறை ஆடையுடன் சிப்ஸ் கிடங்கில் உருளும் இளைஞர்! அதிர்ச்சி வீடியோ..!!!