உலகம் மருத்துவம்

இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளி.! இரண்டுமுறை கீழே விழுந்த இதயம்.!

Summary:

அமெரிக்காவில், நோயாளி ஒருவர் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்க, அவருக்கு பொருத்தப்பட இருந்த இதயம், இரண்டு முறை கீழே விழுந்துள்ளது.

அமெரிக்காவில், நோயாளி ஒருவர் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருந்துளார், அவருக்கு இதயம் பொருத்தப்பட மருத்துவமனை ஒன்றிற்கு இதயம் ஒன்றை ஹெலிகாப்டர் மூலம் கொண்டு சென்றுள்ளனர். அப்போது அந்த இதயம் இரண்டுமுறை கீழே விழுந்துள்ளது.

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மருத்துவமனையில் தரையிறங்கும் போதே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் , ஹெலிகாப்டருக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக, யாருக்கும் பெரிய காயங்கள் ஏற்படவில்லை. 

இதனையடுத்து மீட்பு குழுவினர் ஹெலிகாப்டரை வெட்டி, இதயத்தை பத்திரமாக எடுத்து அங்கிருந்த மருத்துவ ஊழியர் ஒருவரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர் வேகமாக அந்த இதயத்தை அறுவை சிகிச்சை அறைக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது அவர் தடுக்கி கீழே விழுந்தார், அந்த இதயமும் கீழே விழுந்தது. ஆனால், அதற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. அது நல்லபடியாக உரிய நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டதாக பின்னர் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.


Advertisement