இனி இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு வேலைக்கு செல்வது மிக கடினமா? ட்ரம்ப் அதிரடி உத்தரவு!

இனி இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு வேலைக்கு செல்வது மிக கடினமா? ட்ரம்ப் அதிரடி உத்தரவு!



h1b-visa-temporarily-stopped

அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த எச்-1 பி விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர்.

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனா அமெரிக்காவை கடுமையாக தாக்கியது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகளும், உயிரிழப்புகளும் மிக அதிமாக ஏற்பட்டு அந்த நாட்டையே திக்குமுக்காட செய்துள்ளது. இந்த சூழ்நிலையில் தற்போது அமெரிக்காவில் வேலையின்மையும் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள்  எச்-1பி விசாவில் பணியாற்றி வருகின்றனர். எச்-1பி விசா வைத்துள்ள ஒருவர் 60 நாட்கள் மட்டுமே சம்பளம் இல்லாமல் அமெரிக்காவில் வசிக்க முடியும், அதன் பின்பு தாய்நாட்டு திரும்ப வேண்டும் என்பது அங்கு சட்டமாக உள்ளது.

H1b visa

இனிவரும் காலங்களில் வெளிநாட்டினருக்கான வேலை வாய்ப்புகளை குறைத்துவிட்டு உள்நாட்டு மக்களை பயன்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதனால் வேலை வாய்ப்பு தொடர்பான விசாக்களுக்கு கடுமையான விதிமுறைகளை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது அமெரிக்கா. அந்தவகையில், வெளிநாடுகளில் இருந்து வந்து அமெரிக்காவில் வேலை செய்வதற்காக வழங்கப்பட்டு வரும் எச்-1 பி விசாக்களை நடப்பாண்டின் இறுதி வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்து ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக எச்-1 பி விசா மூலம் லட்சக்கணக்கான இந்தியர்கள் அமெரிக்காவில் வேலை பார்த்து வரும் சூழலில்,  இனி புதியதாக இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு வேலைக்கு செல்வது மிக கடினமான காரியமாக இருக்கும் என கூறப்படுகிறது.