புது பொண்டாடி அருகில் இருக்கும்போது லேப்டாப்பை வைத்து மணமகன் செய்த காரியம்..! வைரலாகும் புகைப்படம்.

புது பொண்டாடி அருகில் இருக்கும்போது லேப்டாப்பை வைத்து மணமகன் செய்த காரியம்..! வைரலாகும் புகைப்படம்.


Groom playing game in laptop at marriage event

தனது புது மாணவியை அருகில் வைத்துக் கொண்டு மணமகன் மடிக்கணினியில் கேம் விளையாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

துருக்கி நாட்டைச் சேர்ந்த புராக் என்பவர் புதிதாக திருமணம் செய்த நிலையில் தனது மனைவிக்காக சிறப்பு வீடியோ ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளார். அதற்காக தனது மனைவி மற்றும் மடிக்கணினி உடன் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று உள்ளார்.

ஆனால் அங்கு ஏற்பட்ட ஒரு சில தொழில்நுட்ப கோளாறு காரணமாக வீடியோ எடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது மனைவியை அமர வைத்துவிட்டு தனது கணினியில் கால்பந்து விளையாட்டை விளையாட தொடங்கியுள்ளார் புராக்.

Mysterious

புது மனைவி அருகில் இருக்கும் போது அவரைக் கண்டுகொள்ளாமல் புராக் கேம் விளையாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல் ஆனது. இதனை அடுத்து இது குறித்து விளக்கமளித்துள்ள மணமகன், தனது மனைவிக்காக சிறப்பு வீடியோ ஒன்றை இயக்க திட்டமிட்டதாகவும், ஆனால் எதிர்பாராத தொழில்நுட்ப கோளாறு காரணமாக 30 நிமிடங்களுக்கு மேல் தாமதம் ஏற்பட்டதாகவும் அதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த நேரத்தில் கேம் விளையாடியதாகவும் புராக் கூறியுள்ளார். 

மேலும் சிறிது நேரம் விளையாடிய பிறகு மடிக்கணினியை மூடிவிட்டதாகவும் இல்லையேல் தனது மனைவி எனது லேப்டாப்பை சேதப்படுத்தி இருக்கக்கூடும் என்றும் அவர் நகைச்சுவையாக தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.