உலகம்

11 மாத குழந்தையை உயிரோடு அடுப்பில் வைத்து எரித்த கொடூர தாத்தா-பாட்டி! வெளியான பகீர் காரணம்!

Summary:

grand parents killed 11 month baby for crying

ரஷ்யா ஹக்காசியா பகுதியை சேர்ந்தவர் விக்டோரியா சாகலகாவ். 20 வயது நிறைந்த இவர் தனது 11மாத கைக்குழந்தையை தாய் மற்றும்  தந்தையிடம் ஒப்படைத்துவிட்டு வெளியில் சென்றுள்ளார்.

அப்பொழுது குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது. இந்நிலையில் குழந்தை அமைதியாக இல்லாததால் மதுபோதையில் இருந்த அதன் பாட்டி ஜன்னா குழந்தை அழுகையை நிறுத்தும் வரை தொடர்ந்து மூச்சை அடைத்து பிடித்துள்ளார்.

பின்னர் சத்தமில்லாமல் மயங்கியநிலையில் கிடந்த குழந்தையை  அதன் தாத்தா அலெக்சாண்டர் மியாகசேவ் என்பவர் விறகுகளை எரிக்கும் அடுப்பில் வைத்து எரித்துள்ளார்.இந்நிலையில் சந்தேகமடைந்த பக்கத்துவீட்டுகாரர்போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

அதனை தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டபோது ஜன்னா மூச்சை அடைத்த பின்னரும் குழந்தை உயிருடன் இருந்துள்ளது எனவும்,  அடுப்பில் வீசப்பட்ட பின்னரே துடிதுடித்து உயிரிழந்தது  என்பதும் உறுதிசெய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இந்த வழக்கை நன்கு கேட்டறிந்தநீதிபதி  அலெக்சாண்டருக்கு 15 ஆண்டும், ஜன்னாவிற்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.


Advertisement