அரசு அலுவலகங்கள் பள்ளிகளை மூடுகிறது இலங்கை அரசு..!

அரசு அலுவலகங்கள் பள்ளிகளை மூடுகிறது இலங்கை அரசு..!



government-offices-government-of-sri-lanka-closes-school

பொருளாதார நெருக்கடி மற்றும் கடுமையான எரிபொருள் தேவை குறைபாடு காரணமாக, இலங்கையில் நாளை முதல் அரசு நிறுவனங்கள் மற்றும் பள்ளிகூடங்கள் மூடப்படுகின்றன.. 

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மோசமான நிலையில் உள்ளது மக்களின் அத்தியாவசிய தேவைகளான பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் எரிவாய்வு கிடைக்காமல் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்த எரிபொருள் தட்டுப்பாட்டால் மின்சாரம் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாள் இதனால் மக்களின் பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடால் ஒரு நாளைக்கு 13 மணி நேரம் வரை மின்தடை ஏற்படுகிறது. இந்நிலையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் அரசு நிறுவனங்களை நாளை (திங்கட்கிழமை) முதல் மூட இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது . அதேநேரம் சுகாதாரத்துறை தொடர்பான அலுவலகங்கள் இயங்க அனுமதி அளித்துள்ளது. இதைப்போல இலங்கையிலுள்ளபள்ளிகளும் மூடப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. 

மேலும் கடுமையான மின்தட்டுப்பாடு நிலவுவதால் இணையவழி வகுப்புகளையும் குறைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி, எரிபொருள் தட்டுப்பாடு போன்றவற்றால் இலங்கை மக்களின் துன்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கும் உண்ணும் உணவுக்கும் தவித்து வரும் நிலையில் தான் இலங்கை தற்பொழுது உள்ளது.