மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
குழந்தை பிறந்து 30 நிமிடத்தில் தாய் செய்த காரியம்! நம்பமுடியாத சம்பவம்!
எத்தியோப்பியா நாட்டில் கர்ப்பமாக இருந்த பெண் ஒருவர் பிரசவ வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரசவத்திற்கு முன்பு உயர்கல்வி படித்துக்கொண்ட்ருந்த அவருக்கு பிரசவ நேரத்தில் தேர்வு வந்துள்ளது. இந்நிலையில் பிரசவத்திற்கு முன்பே ஒருசில பாடங்களுக்கான தேர்வுகளை அவர் எழுதியுள்ளார்.
இந்நிலையில் தேர்வு நேரத்தில் அவருக்கு திடீரென வலி வந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு அழகான ஆண் குழந்தை ஓன்று பிறந்தது. குழந்தை பிறந்ததையும் பொருட்படுத்தாமல் அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் தனது தேர்வை மருத்துவமனையில் இருந்தே எழுதியுள்ளார் அந்த பெண்.
இதுபற்றி கூறிய அவர், தனது தேர்வு முடிவுக்காக அடுத்த வருடம் வரை காத்திருக்க என்னால் முடியாது. நான் கட்டாயம் படித்தே ஆகவேண்டும். இதனாலயே தேர்வை மருத்துவமனையில் இருந்தே எழுதியதாக கூறியுள்ளார் அந்த பெண்.