யோகா பயிற்சியின் போது 6 ஆவது மாடியிலிருந்து தலைகீழாக விழுந்த பெண்ணுக்கு நிகழ்ந்த பரிதாபம்!

யோகா பயிற்சியின் போது 6 ஆவது மாடியிலிருந்து தலைகீழாக விழுந்த பெண்ணுக்கு நிகழ்ந்த பரிதாபம்!



Girl slipped and fall down from 80 ft while yoga practice

மெக்சிகோவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வீட்டின் பால்கனியில் யோகா பயிற்சி மேற்கொண்ட போது தவறி விழுந்ததில் எழும்புகள் முறிந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

23 வயதான அலெக்ஸா தெரேசா என்ற அந்த பெண் கல்லூரியில் பயின்று வருகிறார். இவர் யோகா மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஆறாவது தளத்தில் வசித்து வருகிறார். 

கடந்த சனிக்கிழமை தனது நண்பர் முன்னிலையில் வீட்டின் பால்கனியில் யோகா பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது பால்கனியில் விளிம்பில் நின்றவாறு யோகா செய்ய முயன்றுள்ளார். திடீரென ஏற்பட்ட தடுமாற்றத்தால் தலைகீழாக சுழன்றபடி 80 அடி ஆழத்தில் கீழே விழுந்துள்ளார். 

அவர் தலைகீழாக விழும் காட்சி அவரது நண்பரின் மொபைலில் படமாகியுள்ளது. பலமாக காயமடைந்த தெரேசாவை அருகிலிருந்த மருத்துவமணைக்கு தூக்கி சென்றுள்ளனர். அங்கு அவருக்கு 11 மணி நேர அறுவை சிகிச்சை நடைபெற்றது. 

அந்த பெண்ணின் கை, கால், இடுப்பு, தலை என மொத்தம் 110 எழும்புகள் முறிந்துள்ளன. அவர் எழுந்து நடக்க 3 வருடங்கள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தெரேசாவிற்கு இரத்தம் வேண்டி அவரது குடும்பத்தினர் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை வைத்துள்ளனர்.