உலகம் லைப் ஸ்டைல்

15 வயது மாணவனுக்கு ஆபாச படங்களை அனுப்பிய அழகி பட்டம் வென்ற பள்ளி ஆசிரியை..! விசாரணையில் வெளியான உண்மை..!

Summary:

Former Miss Kentucky sentenced to prison for sending sexual photos to teen

அமெரிக்காவை சேர்ந்த 29 வயது பள்ளி ஆசிரியை ஒருவர் 15 வயது மாணவனுக்கு தனது ஆபாச படங்களை அனுப்பிய வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த Miss Kentucky அழகி பட்டத்தை வென்றவர் அமெரிக்காவை சேர்ந்த பள்ளி ஆசிரியை ராம்சே கார்பென்டர் பியர்ஸ். இவருக்கு திருமணம் முடிந்துவிட்டநிலையில் இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை பார்த்துவந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களுக்கு இடைப்பட்ட நாட்களில் தனது ஆபாச புகைப்படங்களை தனது 15 வயது மாணவன் ஒருவனின் தொலைபேசிக்கு அனுப்பியுள்ளார். சிறுவனின் தொலைபேசியில் அவனது ஆசிரியையின் ஆபாச புகைப்படங்கள் இருப்பதை பார்த்த அவனது பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

கடந்த ஒன்றரை வருடங்களாக நடந்த இந்த வழக்கில் ஆசிரியை தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார். முதலில் தனது ஆபாச படங்களை ஸ்நாப்ச்சாட் செயலி மூலம் தனது கணவருக்கு அனுப்புவதற்கு பதிலாக தவறுதலாக அந்த சிறுவனுக்கு அனுப்பிவிட்டதாகவும், நான் கேக்கும்போதெல்லாம் படங்கள் அனுப்பாவிட்டால் இந்த புகைப்படங்களை மற்றவர்களுக்கு காண்பித்துவிடுவேன் என அந்த  சிறுவன்மிரட்டியதால் வேறு வழியில்லாமல் அவன் கேட்கும்போதெல்லாம் அனுப்பவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் ஆசிரியை கூறியுள்ளார்.

 இதனை கேட்ட நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. மேலும் அவர் பணியாற்றிவந்த பள்ளியும் அவரை ஆசிரியை பணியில் இருந்து நீக்கியுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement