தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
தீப்பற்றிய வீட்டிலிருந்து, மகனை காப்பாற்ற தாய் செய்த காரியம்! இறுதியில் நேர்ந்த விபரீதம்! பதறவைக்கும் வீடியோ!
அமெரிக்காவில் பீனிக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் 30 வயது நிறைந்த ராச்சேல் லாங். மூன்றாவது மாடியில் உள்ள இவரது வீடு சமீபத்தில் தீப்பற்றிக் கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இந்நிலையில் குடும்பத்தினர்கள் அனைவரும் வீட்டிற்குள் சிக்கிய நிலையில், ராச்சேல் தனது 3 வயது மகன் ஜேம்ஸனை காப்பாற்ற எண்ணி, அவனை மூன்றாவது மாடியில் இருந்து கீழே நின்றவர்களை நோக்கி தூக்கி வீசியுள்ளார்.
அப்பொழுது கீழே நின்ற கால்பந்து விளையாட தெரிந்த கடற்கரை வீரரான பிலிப் ப்ளாங்க்ஸ் என்பவர் குழந்தையை கீழே விழாமல் தாங்கிப் பிடித்து பாதுகாப்பான இடத்திற்கு தூக்கி சென்றுள்ளார். பின்னர் மீண்டும் தனது மகள் ரோக்சான்னேவை காப்பாற்றுவதற்காக வீட்டிற்குள் சென்ற ராச்சேல் கடுமையான தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கிடையில் வீட்டின் மற்றொரு கதவை உடைத்து உள்ளே சென்ற நபர் ஒருவர் ரோக்சான்னேவை காப்பாற்றியுள்ளார். படுகாயம் அடைந்த அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர் உயிர் பிழைத்தால், 8ற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மனைவியை இழந்து தனது இரு பிள்ளைகளுடன், ராச்சேல் கணவர் தவித்து நிற்கிறார். இந்நிலையில் இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பார்ப்போரை கலங்க வைக்கிறது.