பெரும் சோகம்.. மாரடைப்பால் இளம்வயது கால்பந்து வீரர் திடீர் மரணம்..! 21 வயதிலேயே ஏற்பட்ட பரிதாபம்..!!

ஐவரி கோஸ்ட் நாட்டில் இருக்கும் அபிட்ஜான் மைதானத்தில் உள்ளூர் அணிகளுக்கு இடையே கால்பந்து போட்டியானது நடைபெற்றது. இந்த கால்பந்து போட்டியில் அந்நாட்டைச் சேர்ந்த கால்பந்து வீரர் முஸ்தபா சைல்லா அந்த அணிக்காக விளையாடிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் கோல் போஸ்ட் அருகே விளையாடிக் கொண்டிருந்த முஸ்தபா திடீரென மைதானத்திலேயே சரிந்து விழுந்தார். இதனால் உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த இளம் வீரர் முஸ்தபாவுக்கு வயது 21 ஆகும் நிலையில், அவர் திடீரென மாரடைப்பால் காலமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.