உலகம்

சூடானில் விமான விபத்து! 17 பேர் பலி! அந்த சமயத்திலும் விமானத்திலிருந்த பணத்தை எடுத்துச்சென்ற நபர்கள்!

Summary:

Flight accident in soodan

தெற்கு சூடான் நாட்டின் தலைநகர் ஜூபாவிற்கு அருகிலுள்ள விமான நிலையத்திலிருந்து தென்மேற்கு ஏவியேஷனின் ஏஎன்-26 விமானம் இன்று காலை புறப்பட்டது. சிறிது நேரத்திலேயே அந்த விமானம் கீழே விழுந்து தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் 15 பயணிகள் மற்றும் 2 பணியாளர்கள் என மொத்தம் 17 பேர் பலியானார்கள். 

இதனை விமான நிலைய இயக்குனர் குர் குவோல் உறுதிப்படுத்தி உள்ளார்.  எனினும் பலியானோர் பற்றி எதுவும் கூறவில்லை. அரசு சாரா அமைப்பு தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள பணம், உணவு, வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்கள் ஆகியவற்றை சுமந்து கொண்டு அந்த விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. 

விமானம் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்த நிலையிலும், சுற்றியிருந்தவர்களில் சிலர் விமானம் தீப்பிடித்துக்கொண்டிருந்தபோது அதிலிருந்த பணத்தை அப்பகுதியினர் எடுத்துச்சென்றனர் என விமான நிலைய இயக்குனர் குர் குவோல் தெரிவித்துள்ளார்.


Advertisement