உலகம்

இப்படியும் ஒரு மீன் வகை உள்ளதா! அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய மீன்கள்!

Summary:

Fish

கடலுக்குள் பல வகையான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதில் அதிகமாக காணப்படுவது பல விசித்தமான மீன் வகைகள் தான். அதேபோல் ஒரு விசித்திரமான மீன் வகையான ஆண் குறி என்று அழைக்கப்படும் மீன் வகை ஒன்று கலிபோர்னியா கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளன. 

வடக்கு கலிபோர்னியாவில் பலத்த குளிர்கால புயல்களைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான ஆண்குறி மீன்கள் கலிபோர்னியா கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளன. பார்ப்பதற்கு மிகவும் வினோதமான தோற்றமளிக்கும் ஆண்குறி வடிவ மீன்களை மக்கள் கண்டு ஆச்சிரியமடைகிறார்கள்.

இந்த உயிரினம் பொதுவாக மணலுக்கு அடியில் தான் புதைந்திருக்கும். ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட புயலால் அலைகளைக் கொண்டு வந்து மணல் அடுக்குகளைத் அடித்து சென்றதால் இந்த மீன்கள் தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்த மீனாது சுமார் 10 அங்குல அகலம் கொண்ட ஆண் உறுப்பை போல் காணப்படுவதால் இதற்கு ஆண் குறி மீன் அழைக்கப்படுகிறது. சான் பிரான்சிஸ்கோவிலிருந்து வடக்கே 50 மைல் தொலைவில் உள்ள டிரேக்ஸ் கடற்கரையில் பல மீன்கள் மற்றும் வினோதமான ஆண்குறி வடிவ மீன்கள் கிடக்கின்றன.


Advertisement