இந்தியாவும் - இங்கிலாந்தும் இயற்கையான கூட்டாளிகள் - இங்கிலாந்து பிரதமர்.!

இந்தியாவும் - இங்கிலாந்தும் இயற்கையான கூட்டாளிகள் - இங்கிலாந்து பிரதமர்.!


England Prime Minister Boris Johnson Talks about India England Natural Allies Countries

இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், அரசு சாரா அமைப்பான கார்னகி இந்தியா இணைந்து, 6 ஆவது உலகளாவிய தொழில்நுட்ப மாநாட்டினை காணொளிக்காட்சி வாயிலாக நடத்தியது. 

இந்த மாநாட்டில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேசுகையில், "இந்தியா - இங்கிலாந்துகிடையே பகிரப்பட்ட புதுமை கலாச்சாரம், தொழில் முனைவு ஆற்றல் மூலமாக இருபெரும் நாடுகளும் இயற்கை கூட்டாளியாக இருக்கிறது. 

England

நாங்கள் இருவரும் பல அருமையான திட்டத்தில் ஒன்றாக பணியாற்றி வருகிறோம். வருகிற 10 வருடத்தில் இந்தியாவும் - இங்கிலாந்தும் "2030 இந்தியா - இங்கிலாந்து சாலை வரைபடம்" திட்டத்தில் கூறியுள்ளபடி, தொழில்நுட்பம் மற்றும் பிற பகுதியில் பிணைப்பை ஆழ்படுத்துவோம்" என்று பேசினார். 

2030 இந்தியா - இங்கிலாந்து சாலை வரைபட திட்டம், கடந்த மே மாதம் இங்கிலாந்து - இந்தியா உச்சி மாநாட்டில் காணொளி வாயிலாக தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.