
england health minister affected by corona
இங்கிலாந்தின் சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரியசுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியது எப்படி என்பது குறித்து அதிகாரிகள் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர்.
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 70 கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி பெரும் அச்சறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இங்கிலாந்தில் தற்போது வரை கொரோனா வைரசுக்கு 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸ் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை உறுதி செய்த இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸ், தற்போது தனது வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸுக்கு யார் மூலமாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பது குறித்து அந்த நாட்டு அரசு கண்காணிக்கத் தொடங்கியுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸ் தற்போது, குணம் அடைந்து வருவதாக நம்புவதாக தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement