பறக்கின்ற விமானத்தில் திடீரென உயிர் போற அளவுக்கு அலறிய பெண்! உடனே விமானம் அவசரமாக தரையிறக்கம்! வைரல் வீடியோ...



emergency-landing-due-to-passenger-violence-on-us-flight

அமெரிக்கா ஒமாகா விமான நிலையம் முதல் டெட்ராயிட் நோக்கி புறப்பட்ட ஸ்கைவெஸ்ட் பயணியர் விமானத்தில் கடந்த ஜூலை 17-ஆம் தேதி பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விமானத்தில் 67 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் இருந்தனர்.

23 வயதான மரியோ நிக்பிரேலாஜ் என்ற பயணி, விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் சக பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர், அவரை சமாதானப்படுத்த முயன்ற விமான பணிப்பெண்ணைத் தள்ளி, கொலை மிரட்டல் விடுத்ததுடன், மிகவும் ஆபத்தான முறையில் விமான அவசர கதவைத் திறக்க முயன்றார். இதனால் பயணிகள் பெரும் பீதியும் பதட்டமும் அடைந்தனர்.

விமானத்தினர் உடனடியாக செயலில் இறங்கி, லோவா மாநிலம் உள்ள செடார் ரேபிட்ஸ் விமான நிலையத்தில் விமானத்தை அவசரமாக தரையிறக்கியனர். அங்கு காத்திருந்த அதிகாரிகள் மரியோவைக் கைதுசெய்து, செடார் ரேபிட்ஸ் போலீசிடம் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: பறக்கும் விமானத்தில் திடீரென முன் சீட்டில் அமர்ந்திருந்த பயணியின் கழுத்தை நெறித்து கொடூரமாக தாக்கிய இந்திய வாலிபர்! நடந்தது என்ன? வீடியோ வெளியாகி பரபரப்பு...

பின்னர் விமானம் மீண்டும் வழமைக்கு வந்து டெட்ராயிட் நோக்கி புறப்பட்டது. தற்போது மரியோவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விமானப் பாதுகாப்புக்கு இடையூறாக செயல்பட்டதற்காக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

 

இதையும் படிங்க: Video: நடுவானில் பறந்த விமானத்தில் திடீர் புகை மற்றும் தீ! அலறிய பயணிகள்! பதைபதைக்க வைக்கும் வீடியோ..