மாம்பழத்திற்காக சுவர் ஏறி குதித்த யானை..! இவ்வளவு பெரிய யானை செய்யும் காரியமா இது..? - TamilSpark
TamilSpark Logo
உலகம் லைப் ஸ்டைல்

மாம்பழத்திற்காக சுவர் ஏறி குதித்த யானை..! இவ்வளவு பெரிய யானை செய்யும் காரியமா இது..?

பல நேரங்களில் காட்டு விலங்குகள் உணவு தேடி மக்கள் வசிக்கும் இடங்களுக்கு வருவது வழக்கமான ஓன்று. அதிலும் யானைகள் மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களுக்கு அதிகம் வரும் விலங்குகளில் ஓன்று என்றே கூறலாம்.

இந்நிலையில் தெற்கு ஆபிரிக்காவில் உள்ள சாம்பியா நாட்டில் உள்ளது தெற்கு லுங்வா தேசிய பூங்கா பூங்காவில் இருக்கும் யானை ஓன்று, லாயிட்டா பசிக்கிதே என பக்கத்துக்கு கார்ட்டனில் எட்டி பார்த்துள்ளது. பக்கத்து கார்ட்டனில் மாமரங்கள் இருப்பதாய் பார்த்த யானை இணைக்கு நமக்கு செம வேட்டை என நினைத்துக்கொண்டு கார்ட்டனை நோக்கி சென்றுள்ளது.

ஆனால், யானை போக முடியாத படி 5 அடிக்கு சுவர் எழுப்பப்பட்டிருந்தது. நமக்கு சோறுதான் முக்கியம் குமாரு என்பதுபோல், சற்றும் யோசிக்காமல் திருடர்களைப்போல் சுவர் ஏறி குதித்து அந்த பக்கம் சென்றுள்ளது அந்த யானை. இவ்வளவு சிரமப்படும் வீணாப்போச்சே என்பதுபோல தற்போது மாம்பழ சீசன் இல்லை என்பதால் மாமரத்தில் எதுவும் இல்லாததை பார்த்து மீண்டும் தனது இடத்திற்கு சுவர் ஏறி குதித்து வந்துவிட்டது யானை.

இவ்வளவு பெரிய யானை சுவர் ஏறி குதித்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo