உலகம் மருத்துவம் Covid-19

கொரோனா வைரஸிடமிருந்து மது பாதுகாக்குமா? உலக சுகாதார நிறுவனம் என்ன கூறியுள்ளது?

Summary:

Drinking alcohol no use to corona

கொரோனா வைரசிடம் இருந்து மது பாதுகாக்கும் என சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவி வந்த வேளையில், அதை உலக சுகாதார நிறுவனம் மறுத்துள்ளது.

மது, ஒரு போதும் உடல்நலத்துக்கு நல்லது இல்லை. மதுவை சாப்பிட்டால் கண்டிப்பாக உடல்நலத்திற்கு கெடுதல் தான் வரும் என்பது ஆய்வின் முடிவில் கூறப்பட்டுள்ளது. கெடுதல் ஏற்படுத்தக் கூடியதுதான். உலகளவில் ஆண்டுக்கு 30 லட்சம் பேர் மதுபானங்களால் ஏற்படுகிற பாதிப்பால் மரணம் அடைகின்றனர். இந்த சூழலில் சமீப காலமாக மதுவால்  உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மட்டுமே அதிகரித்துக்கொண்டு வருகிறது.

 இந்த கொடிய பழக்கத்தினால் இளைஞர்கள் பலர் மதுவிற்கு அடிமையாகி வருகின்றனர். சிறுவயதிலேயே இளைஞர்கள் மது பழக்கத்தினை கற்றுக் கொள்வதால், சிந்திக்கும் திறனையே இழந்து விடுகிறார்கள். பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு தண்டனையும் பெறுகிறார்கள்.


இந்த நிலையில் உலக அளவில் பல நாடுகளிலும் மதுபானங்கள் குடித்தால், அது கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாக்கும், கொரோனா வைரசை மது பானங்கள் கொன்று விடும் என்றெல்லாம் தவறான தகவல்கள் சமூக வலைத்தளகளில் வெளியாகின. இதை உலக சுகாதார நிறுவனம் திட்டவட்டமாக மறுக்கிறது. இவ்வாறு பரவி வரும் செய்தி முற்றிலும் வதந்தி என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.


Advertisement