ஒரு நாட்டின் அதிபர் செய்யும் காரியமா இது? நெட்டிசன்கள் கையில் வசமாக சிக்கிய ட்ரம்ப்

ஒரு நாட்டின் அதிபர் செய்யும் காரியமா இது? நெட்டிசன்கள் கையில் வசமாக சிக்கிய ட்ரம்ப்


donald-trump-draw-wrong-color-in-national-flag

எப்போதுமே சுவாரஸ்யமான செய்திகளை கொடுப்பதில் வல்லவரான அமெரிக்க 
அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த முறையும் நெட்டிசன்கள் கையில் வசமாக சிக்கியுள்ளார்.

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தின் கொலாம்பஸ் நகரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை ஒன்றுக்கு சென்றிருக்கிறார் டிரம்ப். அங்கு சிகிச்சை பெறும் குழந்தைகளிடம் நலம் விசாரித்துக் கொண்டே வந்தார்.

america flag

அங்கு குழந்தைகள் தேசிய கொடிகளை நோட்டுகளில் வரைந்து கொண்டு இருந்தனர். அவர்களோடு சற்று நேரம் உரையாடிய டிரம்ப், குழந்தைகள் அழகழகாய் படம் வரைவதை பார்த்ததும் ட்ரம்ப்புக்கும் படம் வரைய ஆசை வந்துவிட்டது. அப்போது ஒரு குழந்தை அமெரிக்க தேசிய கொடியை வரைந்திருந்தது. திடீரென்று குழந்தைகள் மத்தியில் உட்கார்ந்து கொண்ட ட்ரம்ப் அந்த தேசிய கொடிக்கு கலர் அடித்து தருகிறேன் என்று வாங்கி தப்பான கலரை அடித்து விட்டார்.

அப்போது கொடிக்கு தவறான வண்ணத்தை கொடுத்ததனால் சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளார். 

சிவப்பு கோடுக்கு கீழே வெள்ளை நிறம் இருக்க வேண்டிய இடத்தில், அவர் நீல நிற வண்ணத்தை கொடுத்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியதை அடுத்து, நெட்டிசன்களின் கிண்டலுக்கு டிரம்ப் உள்ளாகியுள்ளார்.


அமெரிக்க தேசிய கொடியில், 7 சிகப்பு, 6 வெள்ளை கோடுகள் இருக்கும். கொடியின் இடது ஓரத்தில், நீல நிற கட்டத்துக்குள் 50 நட்சத்திரங்கள் இருக்கும். சிகப்பு கோட்டுக்கு கீழே வெள்ளை நிற கோடுகள் இருக்க வேண்டிய இடத்தில், நீல நிற கோடுகளை டிரம்ப் வரைந்திருந்தார். இப்புகைப்படம் வெளிவந்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் அதிபரே தன் நாட்டு தேசிய கொடியை தவறாக வரைந்ததை நெட்டிசன்களும் கிண்டல் செய்து வருகின்றனர்.