உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை.! உச்சகட்ட கடுப்பில் டொனால்ட் டிரம்ப்.!

Summary:

. ஜோ பைடன் வெற்றிபெற்றுவிட்டதாக தவறாக தகவல்கள் பரப்பப்படுகிறது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில் மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை உறுப்பினர்களில் 270 ஓட்டுகளை பெறுபவரே அதிபராக முடியும் என்ற நிலையில், நடந்து முடிந்த இந்த தேர்தலில் ஜன நாயக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் 264 தேர்தல் சபை வாக்குகளையும், ட்ரம்ப் 214 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இன்னும் சற்று நேரத்தில் ஜன நாயக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி குறித்து அறிவிக்க வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் அதிபர் தேர்தலில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துவிட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் முடியவில்லை. மக்களுக்காக தொடர்ந்து போராடுவேன். ஜோ பைடன் வெற்றிபெற்றுவிட்டதாக தவறாக தகவல்கள் பரப்பப்படுகிறது என தெரிவித்துள்ளார். 

அமெரிக்க அதிபர் தேர்தலில் தபால் வாக்கு எண்ணிக்கை ஜோ பைடனுக்கு சாதகமாக செல்வதால் கடும் கோபம் மற்றும் அதிருப்திக்கு உள்ளாகியிருக்கும் அதிபர் டிரம்ப்  நீண்ட நேரத்தை தொலைக்காட்சியிலே செலவிடுவதாகவும், அவர் ஆத்திரம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


Advertisement