ஓட்டுநர் இல்லாமல் 1 மணி நேரம் வட்டமடித்த கார்! அருகில் சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.! - TamilSpark
TamilSpark Logo
உலகம் லைப் ஸ்டைல்

ஓட்டுநர் இல்லாமல் 1 மணி நேரம் வட்டமடித்த கார்! அருகில் சென்ற போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

அமெரிக்காவில் ப்ளோரிடா மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் திடீரென ஸ்டார்ட் ஆகி வட்டமடிப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். காரின் உள்ளே யாரும் இல்லாத நிலையில் கார் மட்டும் தனியே இயங்கிக்கொண்டிருப்பதை பார்த்து அந்த பகுதியில் கூட்டம் கூடியுள்ளது.

அனைவரும் காரின் அருகில் செல்ல பயந்த நிலையில் ஒருவர் மட்டுமே காரின் அருகே சென்று பார்த்ததில் கருப்பு நிற நாய் ஓன்று ஓட்டுநர் இருக்கையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சுமார் 1 மணி நேரம் போராடி போலீசார் காரை நிறுத்தினர்.

இதுகுறித்து அந்த காரின் உரிமையாளர் கூறுகையில் தனது நாயை காரின் உள்ளே மறந்து விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும், கார் கியரில் இருந்திருக்கலாம், இதனால் நாய் தவறுதலாக காரை இயக்கியிருக்கலாம் என கூறியுள்ளார்.

நல்ல வேலையாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துளன்னர். இருப்பினும், ஒரு நாய் கார் ஓட்டியது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo