"உன்னை நான் இயக்கியிருக்க வேண்டும்! மிஸ் பண்ணிட்டேன்!" விஜயிடம் பீல் பண்ணிய பிரபல இயக்குனர்!
14 ஆண்டுகளாக தாங்க முடியாத இருமல்..! 22 வயது பெண்ணின் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்.!
14 ஆண்டுகளாக தாங்க முடியாத இருமல்..! 22 வயது பெண்ணின் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்.!

கடந்த 14 வருடங்களாக இருமலால் அவதிப்படுவந்த 22 வயது இளம் பெண் ஒருவரின் நுரையீரலில் இருந்து மருத்துவர்கள் சிக்கன் எலும்பை அகற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவை சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவர் தனது சிறுவயதில் இருந்தே தொடர் இருமலால் அவதிப்படுவந்துள்ளார். இதற்காக எத்தனையோ மருத்துவமனைகள் ஏறிஇறங்கியும் அவருக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. மூச்சுக்குழாய் அழற்சியாக இருக்கலாம் என மருத்துவர்களும் அதற்கான மருந்துகளை பரிந்துரை செய்துள்ளன்னர்.
ஆனால், எவ்வளவு மாத்திரைகள் சாப்பிடும் எந்த முன்னேற்றமும் இல்லை. மாறாக அந்த இளம் பெண்ணின் உடல் எடையும் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே சென்றுள்ளது. இந்நிலையில், சீனாவின் மருத்துவ பல்கலைக்கழகம் ஒன்றுக்கு அந்த பெண் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
தன்னுடைய நிலைமையை அந்த பெண் எடுத்துக்கூற, மருத்துவர்கள் வயிற்றில் CT ஸ்கேன் எடுக்குமாறு பரிந்துரைத்துள்ளனர். இதனை அடுத்து பெண்ணின் நுரையீரலில் ஏதோ மர்ம பொருள் இருப்பதை பார்த்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய ஏற்பட்டு செய்தனர். இதனை அடுத்து 30 நிமிடம் நடந்த அறுவை சிகிச்சையில் மருத்துவர்கள் அந்த பெண்ணின் நுரையீரலில் இருந்து சிக்கன் எலும்பு ஒன்றை எடுத்துள்ளனர்.
அந்த இளம் பெண் சிறுவயதில் சாப்பிட சிக்கன் எலும்புத்துண்டு எப்படியோ நுரைஈரலில் சிக்கிக்கொள்ள அந்த பெண் 14 வருடங்களாக வேதனையில் துடித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அந்த பெண், எனது வாழ்நாளில் மீதமுள்ள நாட்களிலாவது இருமல் இல்லாத மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வேன் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.