கொரோனா வைரஸை முதன்முதலாக கண்டுபிடித்த மருத்துவருக்கு நேர்ந்த துயரம்! கர்ப்பிணிமனைவியின் தற்போதைய பரிதாபநிலை!

கொரோனா வைரஸை முதன்முதலாக கண்டுபிடித்த மருத்துவருக்கு நேர்ந்த துயரம்! கர்ப்பிணிமனைவியின் தற்போதைய பரிதாபநிலை!



doctor who found coronovirus is dead

சீனாவில் வுஹான் நகரில் தோன்றி கொரோனா வைரஸ் தற்போது அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 600க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 22000க்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொடிய கொரோனா வைரஸால் பல நாடுகளும் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நாளுக்கு நாள் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் இந்த கொரோனா வைரஸ்க்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் நோயை கட்டுப்படுத்த சீன அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அதற்காக தற்காலிகமாக மருத்துவமனைகளும்  கட்டப்பட்டுள்ளது.

Coronovirus

இந்நிலையில் இந்த கொரோனா  வைரஸை முதன்முதலாக கண்டறிந்தவர் சீனமருத்துவர் லி வென்லியாங்.  இவர் டிசம்பர் மாதத்திலேயே இந்த வைரஸ் தாக்குதலை கண்டுபிடித்துவிட்டார். அதனைத் தொடர்ந்து கொரோனோ வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு  இரவுபகல் தொடர்ந்து சிகிச்சை அளித்துவந்தார். அதனை தொடர்ந்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மருத்துவர் லீக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் தற்போது உயிரிழந்துள்ளார்.மருத்துவர் லீயின் மனைவி தற்போது கர்ப்பமாக உள்ளார். கணவரின் மரணம் குறித்த தகவல் அறிந்த அவர்,  அதிர்ச்சியடைந்த நிலையில் அவரது உடல்நிலையும்  பாதிக்கப்பட்டுள்ளது.

 இந்நிலையில் லீயின் மரணத்திற்கு வுஹான் அரசு 
கொரோனா வைரஸ் தாக்குதலை முதன்முதலில் கண்டறிந்த மருத்துவரான லீ வென்லியாங்குக்கு ஆழ்ந்த இரங்கலையும் மரியாதையும் தெரிவித்துக் கொள்வதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.