வாலிபரின் மீது உள்ள ஆசையால் ஹோட்டல் ரூமுக்கு போன 35 வயசு பெண்! மாமா மற்றும் நண்பர்களுடன் உடலுறவுக்கு கட்டாயப்படுத்திய காதலன்.... இறுதியில் பெட் பாக்ஸில் பிணமான கொடூரம்..!!!
டெல்லி மங்கோல்புரியில் 35 வயது பெண் ஒருவர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலனும் அவரது உறவினர்களும் இணைந்து செய்த கொலை என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாலியல் வற்புறுத்தலுக்கு மறுத்ததே காரணம் என கூறப்படுகிறது. சம்பவத்தில் தொடர்புடைய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வற்புறுத்தலுக்கு மறுப்பு… அதன்பின் தாக்குதல்
மங்கோல்புரி பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வந்த 22 வயது இளைஞருக்கும், அப்பகுதியில் வீடுகளில் துப்புரவு வேலை செய்த 35 வயது திருமணமான பெண்ணுக்கும் பழக்கம் இருந்ததாக தகவல். மூன்று குழந்தைகளின் தாயான அந்தப் பெண்ணை, கடந்த செவ்வாய்க்கிழமை நண்பரின் PG அறைக்கு வருமாறு இளைஞர் அழைத்துள்ளார்.
அங்கு ஏற்கனவே இருந்த அவரது மாமா மற்றும் நண்பருடன் உடலுறவில் ஈடுபடுமாறு அந்தப் பெண்ணிடம் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு பெண் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த இளைஞர் தாக்குதல் நடத்தி, பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சடலம் மறைத்து தப்பிய மூவர்
கொலை நடந்தபோது, மற்ற இருவரும் அறைக்கு வெளியே இருந்து யாரும் உள்ளே வராதபடி கவனித்ததாக தகவல். பின்னர், பெண்ணின் சடலத்தை அறையில் இருந்த பெட் பாக்ஸில் மறைத்து வைத்து மூவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
அறை உரிமையாளர் தகவல்… விரைவு நடவடிக்கை
அன்று மாலை 7 மணியளவில் அறை உரிமையாளர் வந்து கதவு பாதியாக திறந்திருந்ததை கவனித்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது, பெட் பாக்ஸிலிருந்து வெளியே தெரிந்த காலைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து துணை போலீஸ் கமிஷனர் விக்ரம் சிங் தலைமையிலான குழு விரைந்து செயல்பட்டு, சில மணி நேரங்களிலேயே குற்றவாளிகளை கைது செய்தது. போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கொலை மற்றும் ஆதாரங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.