அப்பாவி டெலிவரி ஊழியர் செத்துபோய்ட்டாரே... 10 ரூபாய் கிழிந்த நோட்டை வைத்து அத்துமீறிய செயலை செய்த வாடிக்கையாளர்! டார்ச்சல் தாங்க முடியாமல் டெலிவரி பாய் எடுத்த விபரீத முடிவு.. ஷாக் வீடியோ..!!
டெல்லியில் வாடிக்கையாளர் ஒருவரால் அவமானப்படுத்தப்பட்டு தாக்கப்பட்டதாகக் கூறப்படும் பிளிப்கார்ட் மினிட்ஸ் டெலிவரி ஊழியர் சமீர் ஹுசைன், பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு உயிரிழந்துள்ளார். கிழிந்த 10 ரூபாய் நோட்டை வாங்க மறுத்ததால் அவருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிழிந்த ரூபாய் நோட்டால் ஏற்பட்ட தகராறு
டெல்லியின் கல்யாண்புரி பகுதியைச் சேர்ந்த சமீர் ஹுசைன், பிளிப்கார்ட் மினிட்ஸ் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றி வந்தார். வழக்கம்போல், 'கேஷ் ஆன் டெலிவரி' முறையில் ஆர்டர் செய்த வாடிக்கையாளர் ஒருவரிடம் பொருளை வழங்கச் சென்றுள்ளார்.
இதையும் படிங்க: 16-வது மாடியில் இருந்து அந்தரந்தில் தொங்கிய 3 வயது குழந்தை..! நூலிழையில் குழந்தை மீட்பு..... திக் திக் வீடியோ!!!
அப்போது, பணம் செலுத்துவதற்காக அந்த வாடிக்கையாளர் கிழிந்த 10 ரூபாய் நோட்டைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அதை வாங்க சமீர் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, வாடிக்கையாளர் அவரைத் தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டியதுடன், கன்னத்தில் அறைந்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையில் புகார்; நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு
தனக்கு நேர்ந்த அவமதிப்பு மற்றும் தாக்குதல் குறித்து சமீர் ஹுசைன் டெல்லி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளானதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
இந்த நிலையில், சமீர் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்ட்டுள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.
உழைத்து வாழ்ந்த டெலிவரி ஊழியரின் மரணம் சமூக ஊடகங்களில் அதிர்ச்சியையும், அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் ஏற்படுத்தியுள்ளது. தாக்குதல் தொடர்பான புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
A Flipkart Minutes delivery partner named Sameer Hussain from Kalyanpuri, Delhi, reportedly consumed pesticide after a customer allegedly gave him a torn ₹10 note for a COD order before insulting, threatening and slapping him. He had complained to Delhi Police but received no… pic.twitter.com/k7E2nJtZ6A— T-Rex (@T_RexRoars) October 21, 2026
இதையும் படிங்க: அடேய்.. அது புள்ள டா..! குழந்தைக்கு தாய் செய்த கொடுமை... கூடவே இருந்து எட்டி உதைத்த வளர்ப்பு தந்தை! ஷாக் வீடியோ..!!!