சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
கொரோனா பாதித்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை..! அடுத்த 30 மணி நேரத்தில் காத்திருந்த அதிர்ச்சி..!
சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 400 க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ள நிலையில் உலக நாடுகளுக்கும் பரவிவருகிறது.
இந்தியாவிலும் கேரளா மாநிலத்தில் இதுவரை மூன்று பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சீனாவில் 20,000 க்கும் அதிகமானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில் வுஹான் நகரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்மணி ஒருவருக்கு சமீபத்தில் குழந்தை ஓன்று பிறந்தது.
-edkd6.jpeg)
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பிறந்த குழந்தை என இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும், அந்த குழந்தைக்கு வைரஸ் தாக்குதல் இல்லை என கூறப்பட்ட நிலையில் 30 மணிநேரம் கழித்து அந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.