வயதான தம்பதியை தாக்கிய கொரோனா வைரஸ். சாகும் நேரத்தில் பேசிய கண்ணீர் வரவழைக்கும் வார்த்தைகள்..!



Corono affected elder couples says good bye

சீனாவின் உகான் நகரத்தை மையமாகக் கொண்ட கொரோனா வைரஸ் பாதிப்பால் சீனா உட்பட 28 உலக நாடுகள் கடும் பீதியில் உள்ளது. பாம்பு சூப்பில் இருந்து பரவியதாக கூறப்படும் இந்த கொடூர வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 490 பேர் உயிர் இழந்துள்ளனனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்ட 80 வயதான கணவன் - மனைவி இருவரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனை ஒன்றும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதில், அந்த வயதான பெண் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், சுவாசிக்கக் கூட அவரால் முடியாத சூழ்நிலையிலும் உள்ளார்.

Corono virus

இதுவே தங்களின் கடைசி சந்திப்பு என்பதை உணர்ந்த அந்த தம்பதி மருத்துவமனையில் குட் பை என தெரிவிக்கின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது. கணவன் மனைவி என்றால் என்ன அர்த்தம் எனபதற்கு உதாரணமாக இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.