13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
Breaking news: இந்தியாவில் கொரோனா வைரஸால் 2வது நபர் பலி!
சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் கோர தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இதுவரை இந்நோயால் 4000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்நோய் இந்தியாவிலும் மிக விரைவாக பரவி வருகிறது. இந்நோய்க்கு இதுவரை எந்த விதமான தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கவில்லை. மேலும் இந்நோயால் நேற்று ஒருவர் பலியாகியுள்ளார்.
இந்நிலையில் தற்போது இந்நோயால் மீண்டும் ஒருவர் உயிரிழந்துள்ளார். டெல்லியில் 69 வயதான மூதாட்டி ஒருவர் இந்நோயால் உயிரிழந்துள்ளது தற்போது உறுதியாகியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் மிகுந்த அச்சத்தில் இருந்து வருகின்றனர்.