
corona virus death increased
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு நாளுக்கு நாள் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மேலும் இந்த கொரோனா வைரஸ்க்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் நோயை கட்டுப்படுத்த சீன அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் அதற்காக தற்காலிகமாக மருத்துவமனைகளும் கட்டப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.
சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் வுஹான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 636 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது.
நேற்று மட்டும் 69 பேர் உயிரிழந்ததாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேபோல், 2,447 பேர் புதிதாக கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 817-க்கும் மேற்பட்டோர் குணமாகி வீடு திரும்பி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பிப்ரவரி 7ஆம் தேதி இன்றைய கணக்கின்படி இதுவரை 30,000 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை சீனாவில் 636 பேர் இந்த கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் 73 பேர் குழந்தைகள் என்பது கவலையளிக்கும் செய்தியாக உள்ளது.
Advertisement
Advertisement