உலகம்

நடுக்கடலில் தத்தளிக்கும் சொகுசு கப்பல்! கப்பலில் 61 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு!

Summary:

corona virus attack in ship

ஜப்பானில் நிற்கும் கப்பலில் உள்ளவர்களில் இதுவரை 61 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி வைரசான கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, ஜப்பானில் கப்பல் ஒன்று துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இருந்து ஹாங்காங் சென்று மீண்டும் ஜப்பான் திரும்பிய டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் பயணம் செய்த 80 வயது முதியவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது அண்மையில் தெரியவந்தது.

இந்த பரிசோதனையில் ஏற்கனவே 20 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் 41 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது. சுமார் 3000க்கும் மேற்பட்டப பயணிகள் உள்ள நிலையில், அதில் 61 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து, கப்பலில் உள்ள 3,701 பேரும் 2 வாரங்கள் கப்பலிலேயே தங்கியிருக்க வேண்டுமென ஜப்பான் சுகாதாரத்துறை தெரிவித்தது. இதுவரை 273 பேருக்கு மட்டுமே கொரோனா குறித்த மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும்போது, மேலும் பலருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்படலாம் என அஞ்சப்படுகிறது.
 


Advertisement