உலக அளவில் 40 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு! உலக அளவில் இந்தியா எத்தனையாவது இடம்?

உலக அளவில் 40 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு! உலக அளவில் இந்தியா எத்தனையாவது இடம்?



Corona increased in world

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனாவால் இதுவரை உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சமாக உயர்ந்துள்ளது.

உலகத்தையே உலுக்கி வரும் கொரோனாவால் இதுவரை உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 லட்சமாக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 29 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்று ஆளாகியிருப்பதால், அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 லட்சத்தை கடந்துள்ளது.

corona

இதேபோன்று உலக அளவிலான பலி எண்ணிக்கையும் 2 லட்சத்து 77 ஆயிரத்து 860 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்கா மற்ற நாடுகளை விட அதிக பாதிப்புக்கு ஆளாகியுள்ளது.  அந்நாட்டில், 78 ஆயிரத்து 600 பேர் பலியாகி உள்ளனர். உலக அளவில் 13 லட்சத்து 63 ஆயிரத்து 698 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இது அமெரிக்காவில் 2 லட்சத்து 12 ஆயிரத்து 534 ஆக உள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, ஸ்பெயினில் 2 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா பாதிப்பில் சீனா, கனடா, அமேரிக்கா போன்ற நாடுகளைத் தொடர்ந்து இந்தியா 14வது இடத்தில் உள்ளது.