சுமார் ஒரு லட்சம் பேரை நெருங்கிய கொரோனா பாதிப்பு! தமிழகத்தின் தற்போதைய நிலை!



corona death increased

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று, தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல், தற்போது கொரோனா வைரஸால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,042-ல் இருந்து  3,300ஆக  உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,552-ல் இருந்து 80,711 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை  உலகம் முழுவதும் 98,192 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டோரின் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும், தவறான தகவல்களை பரப்பக்கூடாது எனவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 

corona

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என்றும் தீவிர முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்துக்கு வெளி நாட்டில் இருந்து வரும் அனைத்து விமான பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. டத்தப்பட்டு வரும் நிலையில் ரயில் நிலையங்களிலும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. இதனால் யாரும் பயப்பட வேண்டாம். மேலும் பீதியை கிளப்ப வேண்டாம். வைரஸ் பரவாமல் தடுக்க முதலில் கைகளை அடிக்கடி கிருமி நாசினி போட்டு நன்றாக கழுவ வேண்டும். இருமல், காய்ச்சல் போன்றவை இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.