நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பலி எண்ணிக்கை! 72,436 பேருக்கு கொரோன பாதிப்பு! அதிர்ச்சியில் உலக மக்கள்!

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பலி எண்ணிக்கை! 72,436 பேருக்கு கொரோன பாதிப்பு! அதிர்ச்சியில் உலக மக்கள்!


corona death increased

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை பலர் உயிர் இழந்துள்ளனர். சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கியதாக கருதப்படும் இந்த வைரஸ் தற்போது வெவ்வேறு நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் குடும்பத்தை சேர்ந்த கோவிட்-19 என பெயரிடப்பட்டுள்ள வைரஸ் தாக்குதலால் சீனா பெரும் பாதிப்படைந்துள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 1700 கும் மேலான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

corona
சீனாவில் தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,868- ஆக  அதிகரித்துள்ளது. இந்த கொடூர வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,436 ஆக உள்ளது. 

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால். உலகம் முழுவதும் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் வைரஸ் தாக்குதலால் தவித்துவரும் சீனா நாட்டிற்கு உதவி செய்ய இந்திய அரசு முடிவு செய்துள்ளது. உலக சுகாதாரத்துறை இந்த கொடூர வைரஸை கட்டுப்படுத்த தீவிர முயற்சி செய்து வருகிறது.